‘நிச்சயம் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்!’.. நாசா செல்லும் வாய்ப்பைப் பெற்ற பொறியியல் மாணவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 11, 2020 06:23 PM

திருச்சி அருகே உள்ள உறையூரைச் சேர்ந்த காயத்ரி சமயபுரத்தில் உள்ள கே.ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இசிஇ இறுதி ஆண்டு பயின்று வருகிறார். சென்ற ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்ட்ரோ நெட் மற்றும் கோ4 குரு உள்ளிட்ட நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் நடத்திய திறன் தேர்வில் கிரேட் அடிப்படையில் 2-ஆம் இடத்தை பிடித்த இவர், இதன் மூலம் அமெரிக்காவில் இருக்கும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

Trichy Engineering college girl student goes to NASA

இவருடைய தந்தை பாலசுப்ரமணியன் மருந்து விற்பனையாளராகவும், இவரது தாயார் தனியார் பள்ளியில் ஆங்கில பயிற்றுநராகவும் இருந்து வரும் நிலையில் நாசாவுக்கு செல்ல இவருக்கு போதிய வசதிகள் இல்லாத சூழல் இருந்துள்ளது. இதனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, இவருக்கு மாவட்ட நல நிதி பணிக்குழு நிதியில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். எனினும் நாசா செல்ல 2 லட்சம் ரூபாய் தேவைப்படுவதால், முதல்வரிடம் தனிப்பிரிவில் உதவி கோரியுள்ளார்.

இதனை அடுத்து நாசாவில் நடைபெறும் சா்வதேச அளவிலான விண்வெளி அறிவியல் தோ்விலும் கலந்துகொள்ளவிருக்கும் காயத்ரி, அதில் தேர்ச்சி பெற்றால், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் விண்வெளி துறை சார்ந்த மேற்படிப்பை பயிலும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதற்கான முழு படிப்பு செலவையும் நாசா முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்றும் குறிப்பிடும் காயத்ரி, அந்த தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற்று உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன் என்று கூறியுள்ளார்.

Tags : #COLLEGESTUDENT #TRICHY #NASA