பூமியை நோக்கி வரும் 'எரிகல்'...! '4 கி.மீ.' அகலம்... மணிக்கு '31,320 கி.மீ.' வேகம்... 'ஏப்ரல் 29'ம் தேதி... 'ஆபத்து' இருக்குமா என்று 'நாசா' விளக்கம்...
முகப்பு > செய்திகள் > உலகம்பூமியை நோக்கி வரும் 4 கிலோமீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட எரிகல்லை நாசா தீவிரமாக கண்காணித்து வருகிறது.

வரும் ஏப்ரல் 29ம் தேதி, புதன்கிழமை அதிகாலை 4:56 மணிக்கு பூமிக்கு மிக அருகில் இந்த எரிகல் பறந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த எரிகல் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் கணித்துள்ளது.
இந்த எரிகல்லுக்கு 52768 (1998 OR2) என பெயரிடப்பட்டுள்ளது. இது முதன்முதலில் 1998 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எரிகல் மணிக்கு 31 ஆயிரத்து 320 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என்றும் கூறப்படுகிறது. இது பூமிக்கு மிக அருகில் செல்லும் எரிகல் என்பதால் இதை அபாயகரமான எரிகல்லாக நாசா வகைப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் 2017ம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி புவிக்கு மிக அருகில் வந்த ஃபுளோரன்ஸ் (1981 ET3) என்ற எரிகல் அதிர்ஷ்டவசமாக பூமி மீது மோதாமல் சென்றது. இந்த கல் 2057ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி மீண்டும் வரும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
