இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 04, 2019 12:56 PM
1. ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வந்த நிலையில், அதன் முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

2. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.
3. திருச்சி லலிதா ஜுவல்லரியில், ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில், 2 கொள்ளையர்கள் பிடிப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயிலுக்கு, பயணிகள் ஒன்றுசேர்ந்து ஆயுதபூஜை கொண்டாடினர்.
5. பயங்கரவாதிகள் மிரட்டல் எதிரொலி காரணமாக திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
6. சென்னையில் இன்று பெட்ரோல் விலை, 19 காசுகள் குறைந்து 1 லிட்டருக்கு 77.21 ரூபாயாக இருக்கிறது. டீசல் விலை 9 காசுகள் குறைந்து 1 லிட்டருக்கு 71.15 ரூபாயாக விற்கப்படுகிறது.
7. சூதாட்டப் புகார் எழுந்த, டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று விசாரணை கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. வெளிநாட்டு பயணத்தின்போது கிரிக்கெட் வீரர்களுடன், அவர்களது மனைவியை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
9. முதல் டெஸ்டில் நாங்கள் மோசமாக பந்து வீசவில்லை. எனினும் ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பாக பேட்டிங் செய்தனர் என தென் ஆப்பிரிக்கா வீரர் மகாராஜ் தெரிவித்துள்ளார்.
10. ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா ஆகியோர் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளனர்.
