'அஸ்வினை' தாறோம்.. அந்த 'ரெண்டு பேரையும்' அனுப்பி வைங்க.. முட்டி 'மோதிக்கொண்ட' அணிகள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 06, 2019 04:30 PM

அஸ்வினை டெல்லி கேபிடல்ஸ் அணி தட்டித் தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து டெல்லி அணியின் மூத்த அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளனர். அதேநேரம் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

KXIP likely to get two players from Delhi Capitals, Reports

இந்தநிலையில் அஸ்வின் விவகாரத்தில் டெல்லி, பஞ்சாப் அணிகள் முட்டி, மோதிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஸ்வினுக்கு பதிலாக குறிப்பிட்ட 2 வீரர்களை பஞ்சாப் அணி கேட்டதாகவும், இதனால் இந்த விவகாரத்தில் நீண்ட இழுபறி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முதலில் இந்த பேரத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணி செவி சாய்க்கவில்லையாம். அதனால், அஸ்வினை விற்கும் முடிவில் இருந்து பின்வாங்கிய பஞ்சாப், தற்போது டெல்லி அணி அந்த இரு வீரர்களை கொடுக்க ஒப்புக் கொண்டதால், அஸ்வினை அணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டு இருக்கிறது.

தான் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பதை அண்மையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் நிரூபித்தார். அதோடு பேட்டிங்கிலும் கைகொடுக்க கூடிய வீரர் என்பதால் அஸ்வினை விட்டு கொடுத்தது, பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக இருக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags : #CRICKET #IPL