'வகுப்பறையில் வைத்து மாணவிகளுக்கு ஆபாச வீடியோ?'.. ஆசிரியர் மீது கொதித்தெழுந்த பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 11, 2019 07:51 PM

வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை போட்டு காண்பிப்பதாக, ஆசிரியர் மீது பெற்றோர்கள் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர்.

TN teacher allegedly showing porn videos to girl students

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கிராமத்து நடுநிலைப்பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வரும் 37 வயது ஆசிரியர் சுரேஷ், மாணவிகளிடம் தவறான அணுகுமுறை கொண்டுள்ளதாகவும், ஆபாச வீடியோக்களை போட்டுக் காண்பித்து வந்ததாகவும் மாணவிகள் பெற்றோரிடத்தில் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர்கள் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடத்திலும், காவல் துறையினரிடமும் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சுரேஷ் மீது முதற்கட்ட நடவடிக்கையாக சஸ்பெண்டு உத்தரவிட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, அடுத்த கட்ட விசாரணைக்கு பிறகு, அவர் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மைத் தன்மை இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags : #SCHOOLSTUDENT #NAMAKKAL #TEACHER