2020-ம் ஆண்டு 'விடுமுறை' நாட்கள் அறிவிப்பு.. ஆனா அதுலேயும்.. ஒரு 'திகில்' சம்பவம் இருக்கு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 22, 2019 08:44 PM

வரும் 2020-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Tamil Nadu government announce 2020 public holidays

ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம். உழவர் திருநாள், குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, ஆண்டு முழுவருட கணக்கு முடிவு நாள், மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, மே தினம், ரம்ஜான், பக்ரீத், கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, மொஹரம், காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, மிலாடி நபி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்கள் மாணவர்கள் மட்டுமல்லாது தமிழக அரசு ஊழியர்கள், தமிழகத்தில் செயல்படும் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கும் பொருந்தும். எனினும் இந்த 23 நாட்களில் 7 விடுமுறை நாட்கள் சனி, ஞாயிறுகளில் வருவதால் மாணவர்கள் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வரும் தீபாவளி அடுத்த ஆண்டு சனிக்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது.