நீயெல்லாம் என்ன எதுத்து பேசுறியா?..தீண்டாமையால்.. சக மாணவனின் முதுகை பிளேடால் கிழித்த மாணவன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 13, 2019 11:19 AM

பள்ளியில் படிக்கும் சக மாணவனின் முதுகை மாணவன் பிளேடால் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

A student who has torn a fellow student\'s back with a blade

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சரவணக்குமார் என்னும் மாணவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் சக மாணவன் மகேஷ்வரன் என்பவர் இவரது பையை எடுத்து ஒளித்து, வைத்து விளையாடியுள்ளார்.

இது தெரிந்து, ஏன் பையை ஒளித்து வைத்தாய்? என்று மகேஷ்வரனிடம், சரவணக்குமார் கேட்டிருக்கிறார். அதற்கு சரவணக்குமாரை சாதிப்பெயரை சொல்லி அசிங்கமாகத் திட்டிய மகேஸ்வரன், நீயெல்லாம் என்னைப் பார்த்து பேச வந்துட்டியா? என்று கூறியபடியே திடீரென்று பென்சில் டப்பாவிலிருந்து பிளேடை எடுத்து சரவணகுமாரின் முதுகில் கிழித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

வலி பொறுக்க முடியாமல் சரவணக்குமார் அலற சக மாணவர்களும், ஆசிரியர்களும் ஓடிவந்து அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது சரவணக்குமார் முதுகில் ஏகப்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளது. காவல்துறை இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.