‘ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீது, தங்க வைர நகைகள்’.. கல்கி ஆசிரமத்தில் நடந்த ரெய்டு முடிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 21, 2019 09:50 PM

கல்கி சாமியார் மற்றும் அவரது மகன் கிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரிசோதனை நிறைவு பெற்றதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

IT announces gold, cash bill worth Rs 409 crore seized in Kalki Ashram

ஆந்திராவை தலைமை இடமாக கொண்ட கல்கி ஆசிரமம், நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது. இதனை அம்மா பகவான், ஸ்ரீ பகவான் என அழைக்கப்படும் விஜயக்குமார் என்பவர் நிறுவியுள்ளார். சித்தூர் அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் கட்டணத்துடன் கூடிய தியான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்கி ஆசிரமம் மற்றும் விஜயக்குமாரின் மகன் கே.வி.கிருஷ்ணா நடத்தி வரும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் வராத ரூ.44 கோடி ரொக்கப்பணம், 90 கிலோ தங்க நகைகள், ரூ.20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.409 கோடி மதிப்புள்ள கணக்கில் வராத ரசீதுகள், வெளி நாடுகளில் சொத்துக்குவித்துள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வருமான வரிசோதனை இன்று நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #KALKIBAGAVAN #INCOMETAX #RAID #KALKIASHRAM