'உங்க கணவர் 8-வது மாடியில் இருந்து...'... 'மனைவி எடுத்த விபரீத முடிவு'.. சோகத்தில் ஏசி மெக்கானிக் குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 28, 2019 10:41 PM
சென்னை மேடவாக்கம் குளக்கரை 26-வது தெருவை சேர்ந்தவர் ச.ராஜசேகர்(29). இவர் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா (24). ராஜசேகர் பட்டினப்பாக்கம் டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது தளத்தில் ஏசி பழுது நீக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென கால் தவறி கீழே விழுந்ததால், பலத்த காயமடைந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பட்டினபாக்கம் போலீசார் ராஜசேகரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யத் தொடங்கினர். முதற்கட்டமாக ராஜசேகரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் தன் கணவர் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவத்தை கேட்ட சத்யா, தாளமுடியாத அதிர்ச்சிக்கு ஆளாகினார். அப்போது திடீரென வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்த சத்யா, தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறார்.
இதைப் பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.