அடக்கடவுளே! 'தற்கொலை' செய்த பெண்ணால்... ரோட்டில் 'நடந்து' சென்றவர் பலி

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 05, 2019 06:36 PM

தற்கொலைக்கு முயற்சி செய்த பெண் ரோட்டில் நடந்து சென்றவர் மீது குதித்து, இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Woman Jumped Off Building, Killed Man On Morning Walk

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த கோக்ரா எனும் பகுதியில் கடந்த வியாழக்கிழமை 13-வது மாடியில் இருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இதில் கொடுமை என்னவென்றால் அந்த சமயத்தில் வாக்கிங் முடிந்து வீடு திரும்பிய பாலு கமித்(69) மீது அப்பெண் விழ,இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் பெயர் மம்தா ஹன்ஸ் ராஜ் ரதி(30) என்பதும், தீராத நோயினால் அவதிப்பட்ட அவர் தனது சிகிச்சைக்காக கோக்ராவில் உள்ள சகோதரரின் வீட்டில் தங்கி இருந்ததும் தெரிய வந்தது.தற்போது இதுகுறித்து தெரிந்துகொள்ள அப்பகுதியில் உள்ள சிசிசிடிவி வீடியோக்களை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.