'மறைந்த முதல்வர்' ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க 'அவசர சட்டம்'! - தமிழக அரசு ஆணை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 22, 2020 09:29 AM

வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. 

Jayalalithas \'Veda Nilayam\' to memorial, TN Govt promulgates ordinance

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவதாக ஆணை வெளியாகியுள்ளது. இதன் பொருட்டு போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் உள்ள பொருட்களை அரசுடமையாக்க வழிவகை செய்யும் வகையில் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.

முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அவரது இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.