வேணாம் விட்ருன்னு எவ்வளவோ 'கெஞ்சினாங்க'... ஆனா நாங்க கேட்கல...மருமகன் போலீசில் 'கண்ணீர்' வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அத்தையை நான் கொலை செய்வேன் என கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குற்றவாளி கணேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை கொளத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த குணசுந்தரி என்பவரை அவரது சொந்த மருமகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்தது. இதுதொடர்பாக அவரது மருமகன் கணேஷை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
இந்த கொலை குறித்து கணேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ''அப்பா சந்திரசேகர் இறந்தபிறகு என்னுடைய அத்தை குணசுந்தரிதான் என் மீது அன்பாகவும் எனக்கு ஆறுதலாகவும் இருந்தார். என்னை வளர்த்தது அவர்தான். குணசுந்தரி அத்தையை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் செல்வியை லவ் பண்ணிய தகவல் தெரிந்ததும் அவளை எனக்கு முன்னின்று திருமணம் செய்து வைத்தது அத்தை குணசுந்தரிதான். தீபா சித்தியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்ட தகவல் தெரிந்ததும் அத்தை குணசுந்தரி என்னைக் கண்டித்தார்.
தீபாவிடமும் பேசிப்பார்த்தார். ஆனால், நாங்கள் கேட்கவில்லை. அத்தையை என் கையால் கொலை செய்வேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை,'' என்று தெரிவித்துள்ளார். அத்தையை கொலை செய்த கணேஷ் பைக்கை எடுத்துக்கொண்டு வேலூர் சென்றுள்ளார். லாக்டவுன் நேரத்திலும் எங்கும் சிக்காமல் அவர் வேலூர் வரை சென்றது போலீசாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கணேஷ் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தவுடன் போலீசார் வேலூர் சென்று அவரைக்கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.
