ட்விட்டர் டிரெண்டிங்கில் #BANTIKTOKININDIA.. திடீர்னு PLAYSTORE-ல் மளமளவென குறைந்த டிக்டாக்-ன் ‘ரேட்டிங்’.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | May 19, 2020 02:29 PM

ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலியின் ரேட்டிங் 4.5-ல் இருந்து 2-க்கு மளமளவென குறைந்தது.

Why the Tiktok App\'s rating dropped drastically on Play Store?

இந்தியாவில் பல லட்சம் மக்கள் டிக்டாக் என்ற பொழுதுபோக்கு செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியின் மூலம் பலரும் பிரபலமடைந்து, சினிமாவுக்குள் செல்ல வாய்ப்புகளை பெற்றுள்ளனர். ஆனால் டிக்டாக் செயலியின் மூலம் பல்வேறு குற்ற செயல்கள் நடப்பதாகவும், இந்த செயலிக்கு பலரும் அடிமைப்பட்டு கிடப்பதாகவும் இந்தியாவில் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

டிக்டாக் மூலம் ஏற்பட்ட பழக்கம் பல்வேறு விபரீதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் சாகச வீடியோக்களை எடுக்க முயற்சித்து உயிரை இழந்துள்ளனர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை ஊக்குவிக்கும் விதமாக வீடியோ பதிவிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ட்விட்டரில் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்ற ஹேஸ்டேக்கை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஹரியானாவைச் சேர்ந்த யூடியூப் பிரபலத்துக்கும், மும்பையை சேர்ந்த டிக்டாக் பிரபலத்துக்கும் இடையே வார்த்தைபோர் ஏற்பட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சண்டையாக உருவெடுத்துள்ளது. இதனால் டிக்டாக் மீது ஒரு தரப்பின் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் #BanTikTokInIndia என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ப்ளே ஸ்டோரில் 4.5-ஆக இருந்த டிக்டாக் செயலியின் மதிப்பு 2-ஆக குறைந்துள்ளது.