"வேட்டையாடும் வம்சம்டா".. 'ஒரு டஜன் நாய்களுடன் முயல் வேட்டை'.. 'டிக்டாக்' வீடியோவால் சிக்கிய இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பாண்டியாபுரம் பகுதியில் உள்ள 3 இளைஞர்கள் சேர்ந்து ஒரு டஜன் வேட்டை நாய்களுடன் முயல் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு இவர்களைக் கண்டதும் சாமர்த்தியமாக தங்களைக் காப்பாற்றிக்கொள்ள புதரில் பதுங்கிய முயல் ஒன்றை வேட்டை நாயை ஏவி, பிடித்து வரக் கட்டளையிட்ட இந்த இளைஞர்கள், தங்கள் வேட்டை நாயை வைத்து முயலை வேட்டையாடுவதை வீடியோ எடுத்து, டிக்டாக்கிலும் கெத்தாக பதிவிட்டுள்ளனர்.
அந்த வீடியோவை, “வேட்டையாடும் வம்சம்டா” என்கிற அடைமொழியுடன் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வனத்துறையினரின் கையில் சிக்கியதும், முயல் வேட்டைக்கு நாயை ஏவிய 3 இளைஞர்களையும் பிடித்ததோடு, ஆதாரத்துடன் சிக்கியதால் மூவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அதுமட்டுமல்லாமல், பின்னர் அந்த வேட்டையாடும் வம்ச வாரிசுகளின் வாயாலேயே, அவர்கள் செய்த செயலையும், அந்த தவறை உணர்வதாகவும் கூறவைத்து வனத்துறையினர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர்.
