'அப்ப எதுக்கு லவ் மட்டும் பண்ண?'.. திருமணத்துக்கு மறுத்த காதலி.. ஆத்திரத்தில் காதலன் கொடுத்த கொடூர தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 18, 2019 05:37 PM

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ளது களமருதூர் மாரியம்மன் கோவில். இப்பகுதியைச் சேர்ந்தவர்  ராஜலிங்கம் மகன் சக்திவேல்.

youth assaults his lover after she refused to marry him

சிதம்பரம் கீழவீதியில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் இவர் வேலை செய்து வந்த நிலையில், அதே கடையில் 18 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார். இருவரும் காலப்போக்கில் காதல் புரிந்துள்ளனர். இவர்களின் காதலை அறிந்த அறிந்த கடை உரிமையாளர் இருவரையும், வேலையை விட்டு நிறுத்தியதை அடுத்து அந்த பெண் வீட்டிற்கு செல்லாமல், சிதம்பரம் அருகே உள்ள வடமூர் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கினார்.

ஆனால் சக்திவேலோ தாம்பரத்தில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் அப்பெண்ணை சந்திப்பதற்காக சிதம்பரம் சென்ற சக்திவேல், அவரை பார்த்து பேசிக்கொண்டிருந்தபோது திருமணம் செய்துகொள்ளலாமா கேட்டுள்ளார். ஆனால் அப்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அப்பெண்ணின் நெஞ்சிலும் கழுத்திலும் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதனையடுத்து அவரை போலீஸார் தேடிப்பிடித்து கைது செய்தனர். படுகாயமுற்ற அப்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Tags : #YOUTH #LOVE #VILLUPURAM #POLICE