'வயசு 23 தான்' .. 'ஆனா 8 பெண்களுடன் கல்யாணம்'!.. 9-வதாக ஏமாறிய இளம்பெண்..! மிரள வைத்த தஞ்சை வாலிபர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 22, 2019 11:57 PM

ஒரத்தநாடு அருகே 9 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Youth arrested by police for married 9 women in Thanjavur

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் சந்தோஷ் (23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கருவிழிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த சத்யா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதல் மனைவியுடன் திருப்பூரில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

சில நாட்கள் கழித்து திடீரென சந்தோஷ் காணாமல் போயுள்ளார். இதனால் தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டுமென சத்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே திருப்பூரை சேர்ந்த சசிகலா (19) என்ற இளம்பெண்ணை காதலித்து சந்தோஷ் திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒக்கநாடு பகுதியில் வசித்து வந்ததது சத்யாவுக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் சத்யா புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தியதில், இதுபோல் 8 பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. ஆசை வார்த்தைகளை கூறி இளம்பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வாராம். பின்னர் சில மாதங்களில் அவர்களை தவிக்கவிட்டு மாயமாகிவிடுவை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #POLICE #THANJAVUR #MARRIED #WOMEN #YOUTH #ARRESTED #LOVE