'சைரன் வெச்ச வண்டி... வாக்கிடாக்கினு கெத்தா இருந்தியே தல!' .. அதிரவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 21, 2019 01:36 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி, போலீஸாரைப் போல வலம் வந்த நபரை உண்மையான போலீஸார் கைது செய்துள்ளனர்.

dindugal fake police man arrested by original police

திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலையில் கணினி மையம் வைத்திருந்தவர் செல்வகணேஷ். இவர் நாகப்பட்டிணம் திருவெண்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் விஜயகணேஷ் என்பவரது டாடா சுமோ வாகனத்தை விலைக்கு வாங்கியுள்ளார். 

அதன் பின்னர் அதில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டியும், விளக்குக் கூம்புகள் பொருத்தியும், வாக்கி டாக்கி வைத்துக்கொண்டும் திண்டுக்கல், பழனி, தாராபுரம் சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாரை போலவே கெத்தாக வலம் வந்துள்ளார். 

இதுபற்றிய ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து  ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் என்பவரது தலைமையின் கீழான போலீஸார் செல்வகணேஷை கைது செய்து, அவரின் அடையாள அட்டை, வாகனம் முதலானவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 

Tags : #POLICE #DINDUGAL