"அங்க போய் எதுக்குப்பா 'டிக்-டாக்' பண்ற..." தம்பியை கண்டித்த 'சீமான்'... கொந்தளிக்கும் 'காங்கிரஸ்' கட்சியினர்... தவறுக்கு 'வருத்தம்' தெரிவித்த தம்பி...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 03, 2020 01:05 PM

ராஜீவ்காந்தி நினைவிடத்திலிருந்து, டிக்டாக் வீடியோ வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த வீடியோவுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் நிர்வாகி வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Naam tamilar Duraimurugan apologies for tiktok issue

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு ராஜீவ்காந்தியின் நினைவு தூண் அருகே சீமான் குரலில் டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, துரைமுருகனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

இதனிடையே, துரைமுருகனை தொடர்பு கொண்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டிக்டாக் வீடியோ வெளியிட்ட துரைமுருகன், வருத்தம் தெரிவித்து மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது டிக்டாக் வீடியோவை, பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே நீக்கி விட்டதாக கூறியுள்ளார்.

Tags : #NAAM TAMILAR #SEEMAN #SAATTAI DURAIMURUGAN #SRIVILLIPUTHUR #RAJIVGANDHI #K.S. ALAGIRI