'கொரோனா' தடுப்பு மருந்தை 'சொந்தம்' கொண்டாடும் 'அமெரிக்கா'... 'கடுப்பான ஜெர்மனி'....'ஒட்டு மொத்த' உலகத்துக்கும் 'வழங்க' முடிவு...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 17, 2020 10:35 AM

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஜெர்மனி கம்பெனியை 7 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க அமெரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மருந்தைக் கொண்டு உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

America is trying to own the Corona drug alone

உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ‘ஜெர்மனியின் துபின்ஜென் பகுதியில் உள்ள 'கியூர்வேக்' என்ற பயோபார்மசூட்டிகல் நிறுவனம் இதற்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரூ. 7 ஆயிரம் கோடி கொடுத்து வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. 'அமெரிக்காவுக்கு மட்டுமே இந்த மருந்து' என நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு ஜெர்மனி பொருளாதார துறை அமைச்சர் அல்ட்மாயர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'ஜெர்மனி விற்பனைக்கு அல்ல' என சாடியுள்ளார்.

இதுகுறித்து 'கியூர்வேக்' நிறுவன சி.இ.ஓ., கிறிஸ்டப் ஹெட்டிச் கூறுகையில், ''தடுப்பு மருந்தை மிக விரைவில் கண்டுபிடிப்போம். மருந்து கண்டுபிடிப்பது ஜெர்மனி உள்ளிட்ட ஒட்டு மொத்த உலகிற்காக தான். தனிப்பட்ட நாட்டுக்காக இல்லை'' என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் சியாட் நகரில் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி மையத்தில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து பரிசோதிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த மருந்தைக் கொண்டு உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : #AMERICA #GERMANY #CORONA #TEST #MEDICINE