"மாஸ்க் இல்லன்னா என்ன?..." "மந்திரிச்ச 'தாயத்து' இருக்கே.." "வெறும் 11 ரூபாய்தான்..." அதிரவிட்ட 'சித்திக் பாபா'... களைகட்டிய 'கலெக்ஷன்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 16, 2020 12:55 PM

கொரோனா மாஸ்க் வாங்க முடியாதவர்களுக்காக, தாயத்து தயார் செய்து விற்பனை செய்து வந்த பாபாவால் லக்னோவில் பரபரப்பு ஏற்பட்டது.

Baba, who was selling amulets to Corona victims

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 5 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை சுகாதாரத்துறை உறுதி  செய்துள்ளது. நோய் பரவலை கட்டப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளும் தவித்து வருகின்றன.

இதுவரை கொரோனாவுக்கு மருந்து என எதுவும் வெளியாகவில்லை. பெரும்பாலும் ஹச்ஐவிக்கு அளிக்கப்படும் மருந்துகளே பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

இந்தியாவிலும் வரும் காலத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனாவை கோமியம் குணப்படுத்தும், எனக் கூறி டெல்லியில் கோமியம் பார்ட்டி நடத்தினர்.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், லக்னோவில் அஹமத் சித்திக் என்பவர் கொரோனாவை கட்டுப்படுத்த தாயத்து விற்றுள்ளார். இந்த தாயத்து விற்பனைக்கு, “மக்கள் யாரால் கொரோனா முகமூடி வாங்க முடியவில்லையோ, அவர்கள் அனைவரும் ரூ. 11 கொடுத்து இந்த தாயத்தை வாங்கி செல்லலாம்” என வாசகங்களுடன் கடை போட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.

அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Tags : #CORONA #MASK #AMULET #BABA #ARREST