"இது முட்டை விலையா?..." "இல்ல முட்டாய் விலையா?..." 'வியாபாரிகளை' வச்சு செஞ்ச 'கொரோனா'... "விலை எவ்வளவு தெரியுமா?..."

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 16, 2020 03:37 PM

கொரோனா, பறவைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருவதால் கறிக்கோழி வீழ்ச்சியடைந்ததையடுத்து, முட்டை விலையும் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. தற்போது நாமக்கல்லில் ஒரு முட்டை ரூ. 2.65க்கு விற்கப்படுகிறது.

Egg prices fall to the lows of the past 6 years

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், பங்கு சந்தை முடங்கியது. இதனால் உலகளாவிய அளவில் பெரும் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது.  பெரும் பணக்காரர்கள் பலர் பல ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இதனிடையே கறிக்கோழி மூலம் கொரோனா பரவுவதாக வதந்தி பரவியது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் பரவைக்காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் ரிஸ்க் எடுக்க விரும்பாத மக்கள் கோழிக்கறி வாங்குவதையே நிறுத்தி விட்டனர். தற்போது ஒரு கிலோ கறிக்கோழி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அளவுக்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில், முட்டை விலையும் படிப்படியாக குறைந்து தற்போது அதன் விலை அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. தமிழகத்தில் முட்டை வியாபாரத்திற்கு அடித்தளமாக திகழும் நாமக்கல்லில் நாளொன்றுக்கு 3.5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

இவை அனைத்தும் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டைகள் இங்கிருந்து தான் அனுப்பப்படுகின்றன.  தற்போது ஒரு முட்டை ரூ.2.65க்கு விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இது முட்டை வியாபாரிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முட்டை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் சுமார் 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Tags : #EGG PIRCE #NAMAKKAL #PRICE FALL #CORONA #BIRD FLUE