'வெறும் பத்தே நிமிஷம் தான்...' 'சொந்தக்காரங்க 4 பேர் வந்திருக்காங்க...' ஊரடங்கு உத்தரவால் நடந்த எளிய திருமணம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவால் விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் ஓன்று நடைபெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை தேவைகளை தவிர, இதர அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதில் முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிச்சயம் செய்யப்பட்ட, முரளிதரன்- மீனா தம்பதிக்கு இடையேயான திருமணம் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களது திருமணம் இன்று திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஈஸ்வரன் கோயில் மிகவும் எளிமையாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது. அவர்களது திருமணத்திற்கு மொத்தமே பத்து நிமிடங்கள்தான் வழங்கப்பட்டது. மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் தரப்பில் இருந்து சொந்தக்காரர்கள் 4 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
