'மாஸ்க் அணிந்து... மணம் முடித்த தம்பதி!'... கொரோனாவை அலறவிட்ட திருமணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா எதிரோலியாக திருமண நிகழ்வு ஒன்றில் புதுமண தம்பதிகள் உட்பட அனைவரும் மாஸ்க் அணிந்துகொண்டு சடங்குகளை செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உங்குட்டூர் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் சடங்குகள் நடத்தப்படும்போது புதுமண தம்பதிகள், புரோகிதர் மற்றும் உறவினர்கள் என அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு விழிப்புணர்வுடன் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
