‘சதம் விளாசி தெறிக்கவிட்ட இளம்வீரர்’.. ‘கிங்’ கோலி சாதனை முறியடிப்பு..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 01, 2019 01:29 PM

குறைந்த இன்னிங்ஸில் 11 சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் பாபர் ஆசம்.

Babar Azam overtakes Virat Kohli 3rd quickest to 11 ODI hundreds

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் 115 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் இவர் குறைந்த இன்னிங்ஸில் 11 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலி தனது 11வது சதத்தை 82வது இன்னிங்ஸில் அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஹாசிம் அம்லா (64 இன்னிங்ஸ்), 2வது இடத்தில் குயிண்டன் டி காக் (65 இன்னிங்ஸ்), 3வது இடத்தில் பாபர் ஆசம் (71 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளனர்.

Tags : #VIRATKOHLI #BABARAZAM #QUICKEST #RECORD #TEAMINDIA #PAKISTAN #SRILANKA