VIDEO: ‘செல்ஃபி எடுத்த ரசிகரின் செல்போனை பறித்த அஜித்’!.. அதன்பின்னர் என்ன நடந்தது..? வெளியான ‘புதிய’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் அஜித் வாக்களிக்க வரும்போது செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரிடம் செல்போனை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (06.04.2021) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அதில், நடிகர் அஜித்குமார் முதல் நபராக வாக்குச்சவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்கக் கூடினார்கள். இதனால் சற்று கோபமடைந்த அஜித், அவர்களைக் கோபமாக முறைக்கவே சிலர் திரும்பிச் சென்றனர். அந்த சமயம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க செல்போனுடன் அவர் அருகில் வந்தார். அப்போது அவருடைய செல்போனை அஜித்குமார் பறித்துவிட்டார்.
இதனை அடுத்து காவல்துறையினர் ரசிகர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. பலரும், அஜித் அந்த செல்போனை திருப்பி கொடுத்துவிட்டாரா? என கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து ரசிகரை அழைத்து அந்த செல்போனை அஜித் கொடுத்துவிட்டார். மேலும் மாஸ்க் போட சொல்லியும், இதுபோன்ற இடங்களில் செல்ஃபி எடுக்க கூடாது என்றும் அறிவுறித்து அனுப்பினார்.
இதன்பின்னர் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு நடிகர் அஜித்குமார் காரில் ஏற நடந்து செல்லும்போது, வெளியே நின்று கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரிடமும் ‘ஸாரி... ஸாரி... நன்றி’ என்று கூறிவிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
