'பள்ளி' என்னும் 'அரண்மனை'யில் ... 'மாணவர்கள்' என்னும் 'இளவரசர்கள்' ... ஆரம்ப பள்ளியை வண்ணமயமாக மாற்றிய ரஜினி ரசிகர்கள் !
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெல்லை மேலப்பாளையத்திலுள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளி ஒன்றிற்கு ரஜினி ரசிகர்கள் அரண்மனை கோட்டை சுவர் மற்றும் ரெயில் பெட்டி போன்று வித விதமாக வண்ணம் தீட்டியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநகராட்சி ஆரம்ப பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை இங்கு மாணவர்களின் வருகை குறைவாக இருந்து வந்த நிலையில் ஆசிரியர்களின் முயற்சியால் தற்போது சுமார் 70 மாணவர்கள் வரை கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளிக்கு மேலும் மாணவர்களை கொண்டு வரும் முயற்சியில் ரஜினி ரசிகர்கள் சார்பில் பள்ளி முழுவதும் வண்ணம் தீட்டப்பட்டது. வகுப்பறை சுவர்களுக்கு ரயில் பெட்டிகள் போன்றும், வெளி சுவர்களுக்கு அரண்மனையின் கோட்டை சுவர்கள் போன்றும் வண்ணம் தீட்டினர். மேலும் மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வை தீண்டும் வகையிலான ஓவியங்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
