'கொரோனாவால்' இறந்த 'கர்ப்பிணி பெண்...' ஆனால் 'வைரஸ் பாதிப்பில்லாமல்' பிறந்த 'அழகு குழந்தை...' 'ஆச்சரியமடைந்த மருத்துவர்கள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 08, 2020 06:44 PM

பிரிட்டனில் கொரோனாவில் உயிரிழந்த பெண்ணிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அழகான குழந்தை பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

covid 19 positive mother dies - doctors saved baby

பிரிட்டனில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வடக்கு லண்டனினில் உள்ள ஆர்ச்வே பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பெண் மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, அவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். ஆனால் அவர் வயிற்றில் உள்ள குழந்தை உயிருடன் தான் இருந்துள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு அவர் இறந்த பின்பு அவர் வயிற்றில் இருந்த குழந்தையை எந்தவித பாதிப்பும் இல்லாம் காப்பாற்றினர். இந்த குழந்தை பிறந்து ஆரோக்கியமாக இருந்தது. பின்னர் அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்த போது கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. இந்த செய்தி வைரலாக மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.