ஹெல்த் 'மினிஸ்டரா' இருந்துக்கிட்டு... கொஞ்சம் கூட பொறுப்பில்லாம குடும்பத்தோட 'பீச்ல' சுத்தி இருக்கீங்க?... 'கோபத்தில்' பிரதமர் எடுத்த முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்ஊரடங்கு நேரத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் பீச்சில் சுகாதாரத்துறை மந்திரி சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகை தொடர்ந்து ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் ஈவு இரக்கமின்றி வெகு வேகமாக பரவி வருகிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் உலக நாடுகள் பலவும் ஒன்றிணைந்து கொரோனாவைத் தடுக்க கடுமையாக போராடி வருகின்றன. இதில் முக்கிய நடவடிக்கையாக ஊரடங்கு நடவடிக்கை பார்க்கப்படுகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டறியப்படாததால் ஊரடங்கு நடவடிக்கையை ஒவ்வொரு நாடும் கடுமையாக பின்பற்றி வருகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி டேவிட் கிளார்க் ஊரடங்கு நேரத்தில் குடும்பத்தாருடன் பீச்சில் உலா வந்ததால் பதவியிறக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். நியூசிலாந்து நாட்டில் கடந்த 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் வரக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நேரத்தில் டேவிட் கிளார்க் பீச்சில் வலம்வந்ததால் நியூசிலாந்து மக்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து அவரை சுகாதாரத்துறை இணை மந்திரியாக பதவியிறக்கம் செய்து பிரதமர் ஜெசிந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து ஜெசிந்தா அவர்,'' தன்னுடைய தவறை உணர்ந்து டேவிட் கிளார்க் ராஜினாமா கடிதம் அளித்தார். அவர் செய்த குற்றத்துக்கு நானே அவரை பதவி நீக்கம் செய்திருப்பேன். ஆனால் கொரோனா பரவிவரும் இந்த நேரத்தில் அவரது பங்களிப்பு தேவை என்பதால் அவரை பதவியிறக்கம் செய்துள்ளேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.