'தமிழகத்தில்' இன்று புதிதாக 'எத்தனை' பேருக்கு கொரோனா பாதிப்பு?... 'சிகிச்சை' பெற்று வருபவர்களின் 'நிலை' என்ன?... சுகாதாரத்துறை செயலாளர் 'தகவல்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், "தமிழகத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 42 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்புள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 679 பேருக்கு ஒரே இடத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. கொரோனா பாதிப்புள்ள மற்றவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. அத்துடன் தமிழகத்தில் 4 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று கொரோனா தொற்று உறுதியானவர்களில் 4 பேருக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 72 வயது முதியவருடன் சேர்த்து இதுவரை 21 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
