‘அவரை மாதிரி எல்லா நடிகர்களும் உதவ முன்வரணும்’.. நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித்குமாருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களும் அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்களை மேற்கொள்ள மக்கள் நிவராணம் அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
முதலமைச்சரின் கோரிக்கையை அடுத்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், என பலரும் நிவாரணம் கொடுத்து வருகின்றனர். இதுவரை கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என 1 கோடியே 25 லட்சம் நிவாரணமாக வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, நடிகர் அஜித்குமாரை போல அனைத்து நடிகர்களும் உதவி செய்ய முன்வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித்குமாருக்கு நன்றி, அவரை போல அனைத்து நடிகர்களும் உதவி செய்ய முன்வர வேண்டும் - மாண்புமிகு அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பேட்டி.
— AIADMK (@AIADMKOfficial) April 8, 2020
