'ஊரடங்கிற்கு' பின்... 'இந்த' சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை 'அதிகரிப்பு'... வெளியாகியுள்ள 'ஆறுதல்' செய்தி...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Apr 08, 2020 07:17 PM

பஞ்சாபில் ஊரடங்கினால் போதைப் பொருட்கள் கிடைக்காததால் போதைக்கு அடிமையான பலரும் சிகிச்சை மையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

Corona Lockdown Punjab No Drug Supply Addicts Opt For Therapy

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போதைப் பொருட்கள் விநியோகம்  துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதைக்கு அடிமையான பலரும் அரசின் சிகிச்சை மையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். பஞ்சாபில் உள்ள 198 அரசு மருத்துவமனைகள் மற்றும் 106 தனியார் சிகிச்சை மையங்களில் புதிதாக 15,754 பேர் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சை பெறத் தொடங்கியுள்ளனர். அரசு மையங்களில் 8,091 பேரும், தனியார் மையங்களில் 7,663 பேரும் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதன் மூலம் அங்கு போதை மீட்பு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4.15 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள அமிர்தசரசை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர், "தினமும் 15 பேர் போதை மீட்பு சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டு, முதலில் வீட்டிலிருந்தபடியே சாப்பிடும்படி 2 வாரங்களுக்கு மருந்துகளை வழங்குகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றிப் பேசியுள்ள பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சிந்து, "ஊரடங்கால் போதைக்கு அடிமையான பலர் அதிலிருந்து  மீள்வதற்கான சிகிச்சை பெற வந்திருப்பது வரவேற்புக்குரியது" எனக் கூறியுள்ளார்.