‘தப்பா பரவிட்டு இருக்கு’!.. அது ‘உண்மையில்ல’.. இணையத்தில் தீயாய் பரவிய ‘போட்டோ’.. பிரதமர் வைத்த ஒரு வேண்டுகோள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 08, 2020 08:32 PM

என்னை கவுரவிக்கும் விதமாக 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Don\'t need standing ovation honour me by feeding poor family, Says PM

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரம் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவலர்கள் இரவு பகலாக கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அவர்களை கவுரவிக்கும் விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுமக்கள் தங்கள் வீட்டிருந்து கைதட்ட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 9 மணிக்கு வீடுகளின் மின்விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றி ஒற்றுமையை காட்ட வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று மக்களும் அவரவர் வீடுகளில் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றினர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், ‘என்னை கவுரவிக்கும் விதமாக 5 நிமிடம் எழுந்து நில்லுங்கள் என தவறான பிரச்சாரம் பரவி வருகிறது. என்னை கவுரவிக்க விரும்பினால் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு முடியும் வரை ஒரு ஏழை குடும்பத்திற்கு உதவி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே நீங்கள் என்னை கௌரவிக்க விரும்பும் செயல்’ என பதிவிட்டுள்ளார்.