'கொரோனா' அச்சுறுத்தலிலும்... 'லாபம்' சம்பாதிக்கும் ஒரே 'இந்திய' தொழிலதிபர்!... என்ன 'காரணம்?'...

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Saranya | Apr 08, 2020 03:27 PM

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து வணிக நிறுவனங்களும் இழப்பை சந்தித்துள்ள நிலையில் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் லாபம் சம்பாதித்துள்ளது.

CoronaLockdown Radhakishan Damani Only Indian To Get Richer

கொரோனா அச்சுறுத்தலால் நாட்டிலுள்ள அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் ராதாகிஷண் தமானியின் அவென்யூ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் டிமார்ட் கடைகளில் தொடர்ந்து சிறப்பாக நடந்துவரும் விற்பனையால், நாட்டின் முதல் 12 பணக்காரர்களில் கொரோனாவால் தொழிலில் பாதிப்படையாத ஒரே நபராக தமானி உள்ளார்.

தமானியின் அடைந்துள்ள லாபத்திற்கு காரணமான டிமார்ட்டுகள் இந்த ஆண்டு 18 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதால், அவருடைய சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதற்கு ஊரடங்கால் அச்சத்தில் மக்கள் பொருட்களை வாங்கிக் குவித்துள்ளதே காரணம் எனக் கூறப்படுகிறது.