'என் மக்கோள்!'.. 'கோர தாண்டவம் ஆடும் கொரோனா!'.. 'நாட்டு மக்களுக்காக மீண்டும் மருத்துவ பணிக்கு திரும்பிய 'பிரதமர்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 08, 2020 03:02 PM

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில், அயர்லாந்து பிரதமர் 7  ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மருத்துவ பணிக்கு திரும்பியுள்ளார்.

Ireland PM turns to medical field to work against Covid19

இந்தியா, ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் சூழலில் அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர், கொரோனாவை எதிர்த்து மருத்துவப் பணியாளாராக தன்னாலான சிறிய உதவியேணும் செய்ய வேண்டும்  என்று இத்தகைய முடிவை எடுத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ, 7 ஆண்டுகளுக்கு முன்புவரை மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்தார். அதன் பின்னர் அவர் சுகாதாரத்துறை அமைச்சரானார். இதனை அடுத்து அவரது மருத்துவருக்கான லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அயர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 158 பேர் உயிரிழந்துமுள்ளனர்.

இதனை அடுத்து கொரோனாவை எதிர்த்து போரிட நாடு முழுவதுமுள்ள மருத்துவ பணியாளர்கள் தங்கள் பங்களிப்பை அரசுக்கு தர முன்வர வேண்டும் என்று அந்நாட்டின் தற்போதைய சுகாதார அமைச்சர்  சிமோன் ஹாரிஸ் விடுத்த அழைப்பினை ஏற்று 60 ஆயிரம் மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிரான மருத்துவ பங்களிப்பில் இணைந்தனர். அந்த 60 ஆயிரம் பேரில் ஒருவர்தான் லியோ. ஆம், தானும் இந்த பணிகளில் இணைந்து, வாரம் ஒருமுறை பணிபுரிந்து வருகிறார். கொரோனா அறிகுறி அல்லது அச்சத்துடன் போன் செய்பவர்களின் போன் காலை அட்டென் செய்து பேசியும், கொரோனா இருக்கா இல்லையா என ஸ்கிரீனிங் செய்து பார்க்கும் முதற்கட்ட பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள லியோ, இதற்கென தன் குடும்பத்தாரையும் இந்த விதமான தன்னார்வ பணிகளில் ஈடுபட வைத்துள்ளார்.