‘ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சுடும்’.. கொரோனா கண்டறியும் புதுசோதனை முறை அறிமுகம்..! திருப்பூர் கலெக்டர் அசத்தல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 08, 2020 03:13 PM

கொரோனா நோயாளிகளை கண்டறியும் Walk-in-Sample என்ற பரிசோதனை முறை திருப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Corona sample collection booth opened in Tiruppur govt hospital

இந்தியாவிலியே முதல் முறையாக கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு மருத்துமனையில் இந்த Walk-in-Sample பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பரிசோதனை முறையில், ஒரு அறையில் சிறிய துளையுடன் கூடிய கண்ணாடி தடுப்பு இருக்கும். இந்த தடுப்பின் ஒரு பக்கம் கொரோனா நோய் அறிகுறி உள்ள நபரும், மறுபுறம் மருத்துவ பணியாளரும் இருப்பர். மருத்துவ பணியாளர் அந்த துளை வழியே கையை விட்டு வைரஸ் அறிகுறி உள்ள நபரிடம் இருந்து ரத்தம் மற்றும் தொண்டைக்குழி திரவ மாதிரிகளை எடுப்பார். அதன் பின்னர் கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த நடைமுறை இரண்டே நிமிடங்களில் முடிந்துவிடும். மேலும் இந்த எளிய அறையை உருவாக்க 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பாதுகாப்பாகவும், விரைவாகவும் பரிசோதனை மாதிரிகள் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பரிசோதனை முறை தற்போது தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்துள்ளார்.