‘பேராசிரியர் வகுப்பில் கண்டித்ததால்'... 'மாணவன் எடுத்த விபரீத முடிவு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 22, 2019 11:07 PM

நாமக்கல் அருகே பேராசிரியர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவர், ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

engineering student committed suicide in namakkal

நாமக்கல் அடுத்த பழையபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் தீபக். தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த புதன்கிழமையன்று, வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்ததாகவும் இதனைப் பார்த்த பேராசிரியர் மாணவனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், மாணவன் தீபக்கிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த பேராசிரியர் அவரது பெற்றோரை  கல்லூரிக்கு அழைத்து வருமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் தீபக், கடந்த புதன்கிழமையன்று இரவு திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே மற்றும் நாமக்கல் காவல் நிலைய போலீசார் தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Tags : #SUICIDE #NAMAKKAL