‘பிரபல இட்லி கடைக்கு’... 'சீல் வைத்த அதிகாரிகள்'... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 10, 2019 08:13 PM

சென்னையில் மிக முக்கிய உணவகங்களில் ஒன்றான முருகன் இட்லி கடையின் உற்பத்தி கூடத்துக்கு, உணவு பாதுகாப்புத் துறையினர், தற்காலிகமாக சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murugan idly shop sealed temporarily due to complaint

சென்னை முழுக்க முருகன் இட்லி கடைக்கு, சுமார் 20-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்நிலையில் முருகன் இட்லி கடை உணவகத்தின் பிராட்வே கிளையில், கடந்த 7-ம் தேதி வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர், உணவு பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து, பிராட்வே முருகன் இட்லி கடைக்குச் சென்று உணவு மாதிரிகளை சோதனை செய்தபோது, புழு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள அனைத்து முருகன் இட்லி கடைக்கும், உணவு உற்பத்தி மற்றும் மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் கூடம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ளது. அங்கு சென்று சோதனை நடத்தியப் பின்னர், உற்பத்திக் கூடத்திலும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அம்பத்தூர் முருகன் இட்லி உணவகத்தின் உற்பத்திக் கூடத்துக்கு தற்காலிகமாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தது தொடர்பாக முருகன் இட்லி கடை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : #IDLYSHOP #MURUGAN