‘வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து’... ‘சென்னையில் இருந்து திரும்பியபோது’... ‘புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம்’... 'கல்யாணமான ஒரு வாரத்தில் நடந்த துக்கம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியலூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Tanjore Newly married Man Died in Accident Wife Critical Tanjore Newly married Man Died in Accident Wife Critical](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tanjore-newly-married-man-died-in-accident-wife-critical.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூரை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் சென்னையை சேர்ந்த பூர்ணிமா என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி, மாப்பிள்ளை ஊரான அம்மாபோட்டையில் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து பெண்ணின் ஊரான சென்னையில் நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் தம்பதிகள் இருவரும் சோழன் எக்ஸ்பிரசில் மாப்பிள்ளை ஊரான தஞ்சாவூருக்கு திரும்புவதாக இருந்தது. இந்நிலையில், உறவினர் விஜயன் என்பவரின் கார் சென்னைக்கு வந்ததால், ரயிலில் செல்லாமல், காரில் ஏறி நேற்று இரவு தஞ்சைக்கு கிளம்பினர். அரியலூர் அருகே மருதையாற்று பாலத்தில் செல்லும் போது ஓட்டுநர் தூங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கார் பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் புது மாப்பிள்ளை கண்ணதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணப்பெண் பூர்ணிமா உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஒரு வாரத்தில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)