முன்ன மாதிரிலாம் என்ன 'லவ்' பண்றதே இல்ல சார்...! 'காதலியுடன் பைக்கில் சென்ற கணவனை சேஸ் பண்ணி...' கையும் களவுமாக மாட்டிக்கிட்ட சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 14, 2020 06:31 PM

காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காதலியுடன் கொண்டாடிய தனது கணவரை, கையும் களவுமாக மனைவியிடம் சிக்கிய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

Husband who went with his girlfriend was trapped

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து பரிசுப் பொருட்களை பரிமாறி அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய கணவரை, கையும் களவுமாக மனைவியிடம் மாட்டிக்கிட்ட சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இன்று காலை தலைநகர் பாட்னாவில் உள்ள பைலே சாலையில், தனது கணவர், வேறு ஒரு பெண்ணுடன் இரு சக்கர வாகனத்தில் செல்வதை கண்டறிந்த மனைவி அவர்களை விரட்டிப் பிடித்துள்ளார்.

ஒரு பக்கம் காதலி, ஒரு பக்கம் மனைவி என்று பொறியில் சிக்கிய எலியாக கணவர் தவிக்க, அவரை வார்த்தைகளால் மனைவி அர்ச்சித்துள்ளார். சாலையில் களபேரம் நடப்பதை அறிந்த போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

போலீசாரிடம் அந்த மனைவி கூறுகையில், “மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு திருமணம் ஆனது. 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வரை மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். இப்போது தான் அவர் மாறிவிட்டார். முன்போல் என்னிடம் அன்பு காட்டுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கணவரிடம் விசாரிக்கையில், காதலர் தினம் என்பதால் தனது காதலியை வெளியே அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். விவகாரம் தீராத நிலையில், மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்..

Tags : #LOVERSDAY