'விவசாயிகள் படை' சூழ ... மாட்டு வண்டி ஓட்டி வந்த 'முதல்வர்' ... விவசாயிகள் அளித்த 'காப்பாளன் பட்டம்'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 08, 2020 03:36 PM

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு 'காவிரி காப்பாளன்' என்ற பட்டம் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.

Tamilnadu CM Edappadi Palaniswami arrives in a cart

காவிரி டெல்டா பகுதியை காவிரி வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு திருவாரூரில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருக்கு 'காவிரி காப்பாளன்' என்ற விருதை  வழங்கி கவுரவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய அறிவிப்பு மற்றும் திட்டங்களையும் இந்த விழாவின் போது அறிவித்துள்ளார். காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேறும் என கூறிய முதலமைச்சர், நீடாமங்கலத்தில் நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம், கும்பகோணத்தில் வெற்றிலைக்கான சிறப்பு மையம் ஆகியவை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக சாலையின் இருபுறமும் விவசாயிகளும், பொதுமக்களும் கூடி உற்சாகமாக வரவேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டி ஓட்டி நிகழ்ச்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #EDAPPADI PALANISWAMI #TAMILNADU #FARMERS