என்ன 'கண்ணுங்களா' ரெடியா ! ... ஆல் இஸ் வெல் 'மக்களே'.. நாளை ஆரம்பமாகும் 'பிளஸ் 2' தேர்வு'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதவுள்ள பிளஸ் - டூ பொதுத் தேர்வு நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
பிளஸ் டூ மாணவ மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்கி மார்ச் மாதம் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு நேரம் காலை 10 மணி முதல் மதியம் 1 : 15 மணி வரை நடைபெறும். இதில் முதல் பதினைந்து நிமிடங்கள் வினாத்தாள் வாசிக்கவும், மற்ற விவரங்கள் சரி பார்க்கவும் மாணவர்களால் பயன்படுத்தப்படும்.
தேர்வுகளில் மாணவர்கள் முறைகேட்டை தடுக்க மாநிலம் முழுவதும் நான்காயிரம் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வி தேர்வு துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியாகுமென பள்ளி கல்வி துறை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : #+ 2 EXAM #TAMILNADU #PUBLIC EXAM