‘என் திட்டங்களை அவர் நிறைவேற்றுகிறார்’.. ‘ஜெகன் மோகன் ரெட்டி குறித்து சீமான் கருத்து’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 08, 2019 12:37 PM

தமிழ்நாட்டில் தான் கூறும் திட்டங்களை ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என சீமான் கூறியுள்ளார்.

Jagan Mohan Reddy implements my plans in Andhra Says Seeman

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டதில் இருந்து அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறார். இந்நிலையில் நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய சீமான், “தமிழ்நாட்டில் நான் கூறும் திட்டங்களை ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆந்திர முதல்வர் எனது புத்தகத்தை வைத்திருப்பார் என நினைக்கிறேன்.

நான் சொன்னதுபோல ஜெகன் மோகன் ரெட்டி காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை கொடுத்துள்ளார். நான் இங்கு சொல்லும் யோசனைகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிதான் செயல்படுத்துகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #TAMILNADU #ANDHRAPRADESH #JAGANMOHANREDDY #SEEMAN #NTK