இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Oct 08, 2019 11:25 AM
இன்றைய முக்கிய செய்திகளை ஒன்றாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது:-

1. பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு, டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. ரஃபேல் விமானத்தின் மீது தேங்காய் வைத்து, முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் எழுதினார்.
2. 2019ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. சூரியக் குடும்பத்திற்கு வெளியேவுள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
4. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் கேரளாவில் தொல்லியல் ஆய்வு நிறுத்தப்பட்டதுபோல் கீழடியிலும் நிறுத்திவிடக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
5. ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்படும் குடிநீர் இன்றுடன் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
6. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதீன் மகன் ஆசாத்தை டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷாவின் தங்கை ஆனம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நிதி நிறுவனத்தில் உரிமையாளர் கருணா வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற திமுக திட்டமிட்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
5. இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
10. சீன அதிபர் தமிழகம் வருவதை அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்றும் நல்லுறவு பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி-சீன அதிபர் ஸி ஜின்பிங் தமிழகத்தில் நடத்துவது வரவேற்கத்தக்கது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
