‘17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 07, 2019 01:52 PM

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain alert in 17 Districts IMD Chennai Tamilnadu

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : #RAIN #ALERT #DISTRICTS #LIST #IMD #CHENNAI #TAMILNADU