அது எப்படி சரிசமமா 'சொத்தை' பிரிச்சு கொடுக்கலாம்?... ஆத்திரத்தில் தந்தைக்கு... மகன் செய்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 17, 2019 10:57 PM

சொத்தை சகோதரிகளுக்கு சரிசமாக பிரித்து கொடுத்ததால் மகனே, தந்தையை டிராக்டர் ஏற்றிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Son killed father near Chengalpattu, Police Investigate

மதுராந்தகம் அடுத்த முருகம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு 3 மகள்கள் 2 மகன்கள் என 5 பிள்ளைகள் உள்ளனர்.(இதில் ஒரு மகன் மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர்) அண்ணாமலை தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை பிள்ளைகள் 5 பெருகும் 3 ஏக்கர் வீதம் சமமாக எழுதி வைத்திருக்கிறார். இளைய மகன் மனநிலை சரியில்லாதவர் என்பதால் அவரது சொத்தையும் தன்னுடைய இன்னொரு மகனான அண்ணாமலையே அனுபவித்து கொள்ளலாம் என்று எழுதி இருந்தார்.

ஆனால் சகோதரிகள் மூவருக்கும் சொத்தை சரிசமமாக பிரித்து கொடுத்தது ஏழுமலைக்கு பிடிக்கவில்லை. இதனால் ஆளுக்கு 1 ஏக்கர் மட்டும் எழுதிக்கொடுக்கும்படி ஏழுமலை, அண்ணாமலையை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அண்ணாமலை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று வயலில் வேலை செய்து கொண்டிருந்த அண்ணாமலை மீது ஏழுமலை டிராக்டர் ஏற்றிகொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.

தகவலறிந்த போலீசார் அண்ணாமலையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தப்பியோடிய ஏழுமலையையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.