ஏன் 'டியூஷன்' போகல?... 'அண்ணன்' திட்டியதால்... தோழியுடன் 'மாயமான' மாணவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 16, 2019 06:08 PM

டியூஷனுக்கு ஏன் போகவில்லை? என அண்ணன் திட்டியதால், 10-ம் வகுப்பு மாணவி தோழியுடன் மாயமான சம்பவம் நெல்லையில் நிகழ்ந்துள்ளது.

10th Class Students missing in Tirunelveli, Police Investigate

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவரது மகள் பவித்ரா. அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் சிந்து. இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று மாலை டியூஷன் செல்லவில்லை என்பதால் பவித்ராவின் அண்ணன் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பவித்ரா, சிந்துவிடம் சொல்லி அழுதுள்ளார். பின்னர் இருவரும் கடைக்கு சென்று வருகிறோம் என்று வீட்டில் கூறி சென்றுள்ளனர். வெகுநேரம் ஆகியும் தோழிகள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அக்கம்பக்கத்தில் தேடிய பெற்றோர், தொடர்ந்து இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். தற்போது போலீசார் இரண்டு சிறுமிகளையும் தேடி வருகின்றனர்.