வாலிபரிடம் இருந்து 'இரண்டரை' லட்சம்... ஆபாச 'வீடியோக்கள்' பறிமுதல்... கைது 'வேட்டை' தொடரும்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Dec 14, 2019 12:16 AM
தமிழ்நாட்டில் இன்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வரும் சிறார் ஆபாச வீடியோக்கள் வேட்டைக்கான பிள்ளையார் சுழி தென் கொரியா நாட்டில் இருந்து தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த ஆண்டு தென் கொரிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆபாச வீடியோ தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சர்வர்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதில் சிறுவர், சிறுமிகளின் இரண்டரை லட்சம் ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பல்வேறு நாடுகளில் இருந்தும் இளைஞர்கள் இணையதளம் வழியாக தொடர்புகொண்டு அந்த இளைஞரிடம் இருந்து வீடியோக்களை வாங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்தே அனைத்து நாடுகளின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழக காவல்துறைக்கு மத்திய அரசு தகவல் அளித்தது. சிறுவர்கள் ஆபாச படங்கள் பார்ப்பதில் தமிழகம் குறிப்பாக சென்னை முதலிடத்தில் இருக்கும் விவரமும் இதற்கு அடுத்தே தெரியவந்தது. தற்போது 6500 பேரின் பட்டியலை தயார் செய்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் தமிழகம் முழுவதும் 1,500 பேர் இது போன்று குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்து பரப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக திருச்சியில் ஒருவரை சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தமிழகத்தின் பிற நகரங்களிலும் இந்த கைது வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.