ஒரே கல்லில் பல மாங்காய்கள்... ஐபிஎல்லை வைத்து... செம திட்டம் போடும் பிசிசிஐ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 17, 2019 10:27 PM

விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும், வருவாயை பெருக்கும் நோக்கிலும் வருடத்துக்கு 2 ஐபிஎல் தொடர்களை பிசிசிஐ நடத்திட திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

IPL 2020: BCCI decided conducting 2 IPL\'s in a Year?

பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகக் குழுவினர் இடையேயான கூட்டம் கடந்த நவம்பர் 5-ம் தேதி நடைபெற்றது. அதில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெறாததால், அதற்குப்பதிலாக வருடத்துக்கு 2 ஐபிஎல் தொடர்களை நடத்திட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு சீசன் இந்தியாவிலும், மற்றொரு சீசன் வெளிநாட்டிலும் நடைபெறுமாம். இதன் வழியாக வருமானம் பெருகும், அதேநேரம் விளையாட்டு வீரர்களின் திறன் மேம்படும் என்பது பிசிசிஐயின் திட்டமாக உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது