பெண் மருத்துவரை... வலுக்கட்டாயமாக 'மது' குடிக்க வைத்துள்ளனர்... அதிரவைக்கும் அறிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 14, 2019 05:58 PM
இந்தியாவை மொத்தமாக உலுக்கிய பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைதான நான்கு பேரையும், ஹைதாராபாத் போலீசார் என்கவுண்டரில் கடந்த வாரம் சுட்டுக்கொலை செய்தனர். இதுதொடர்பாக தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

மறுபுறம் உச்ச நீதிமன்றமும் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து இதுதொடர்பாக 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் பிரியங்கா ரெட்டியின் பிரேத பரிசோதனை தடவியல் அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அவரது உடலில் மது இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கூல்ட்ரிங்ஸில் மது கலந்து அவருக்கு கொடுத்ததாக கைதான நால்வரும் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
Tags : #TELANGANA #POLICE
