'கையில ஆசிட் இருக்கு'...'பொண்ண என்னோட அனுப்பு'...'பாட்டிக்கு நடந்த கொடூரம்'...பகீர் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 14, 2019 12:05 PM

பெண்ணை கடத்த முயன்ற போது, அதை தடுக்க முயன்ற பெண்ணின் பாட்டி  ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Old Woman Who Attempted to Save Another Woman Killed in Acid Attack

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் தனம். இவரது இரண்டாவது மகள் விஜயாவுக்கும், தருமபுரியை சேர்ந்த சாமுவேல் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயாவின் சகோதரி மகளான வசந்தி மீது சாமுவேலிற்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த வசந்தி அதிர்ச்சியில் உறைந்து போனார். இதையடுத்து அவர் நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை அறிந்த சாமுவேல் வசந்தி மீது இருந்த ஆசையால், அவரை எப்படியாவது அடைந்து விட வேன்டும் என்ற நோக்கில் அவரை கடந்த திட்டமிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து  ஆசிட் மற்றும் கத்தியுடன் வசந்தியின் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வசந்தி எனக்கு வேணும், அவளை என்னோட அனுப்புங்க என பிரச்னை செய்துள்ளார். இதனால் பதறி போன மூதாட்டி பயத்தில் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல் மூதாட்டி மீது ஆசிட் ஊற்றியுள்ளார்.

இந்த கோர சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி துடி துடித்து உயிரிழந்தார். இந்நிலையில் பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சாமுவேலை அடித்து உதைத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சாமுவேல் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது சாமுவேல் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACIDATTACK #MURDER #ATTACKED #OLD WOMAN